டெல்லி:
டெல்லியில் காந்தி படுகொலைசெய்யப்பட்ட இடமான ‘பிர்லா இல்லம்’ இப்போது ‘காந்தி ஸ்மிரிதி’ என்று அழைக்கப்படுகிறது. இதை பார்வையிட பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இது காந்திய வாதிகள், காங்கிரஸ் கட்சியினர் மட்டுமின்றி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாட்டிற்கு சுதந்திரம் வாங்கித்தந்தை தேசப்பிதா மகாத்மா காந்தி, கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்ட இடமான டெல்லியில் உள்ள ‘பிர்லா இல்லத்தை மோடி தலைமையிலான பாஜக அரசு ‘காந்தி ஸ்மிருதி’ என்று பெயர் மாற்றியது. மேலும் அதை டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு உள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இன்று காந்தி நினைவுநாள் அனுசரிக்கப்பட்டு வரும் வேளையில், காந்தி ஸ்மிரிருதியில் அஞ்சலி செலுத்தவோ, பார்வையிடவோ மத்தியஅரசு பொதுமக்களுக்கு தடை விதித்துள்ளது. இது காந்தியவாதிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
கோட்சேவால் காந்தி சுட்டுக் கொல்லப்பட்டதை இடமான காந்தி ஸ்மிரிதியில் பல்வேறு நினைவுப்பொருட்கள் உள்பட, புகழ்பெற்ற பிரெஞ்சு புகைப்படக்காரர் ஆன்ரி கார்த்தியே -பிரெஸோனால் எடுக்கப்பட்ட காந்தி கொல்லப்பட்டது தொடங்கி அவருடைய இறுதி யாத்திரை வரை சித்திரிக்கும் இந்தப் புகைப்படங்கள் அங்கு இடம்பெற்றுள்ளன.
நினைவில்லத்தின் தாழ்வாரங்களிலும் சுவர்களிலும் பெரிய அளவில் மாட்டப்பட்டிருக்கும் இந்தப் படங்களை ஒருவர் வரிசையாகப் பார்க்கும் பொதுமக்கள் கீழேயுள்ள படவரிகளைப் படிக்கும்போது அன்றைய நிகழ்வுகளை வரிசையாகக் காணும் அனுபவத்தைப் பெறுவார்.
இப்போது அந்தப் படங்கள் அகற்றப்பட்டு, டிஜிட்டல் என்ற பெயரில் மாற்றம் செய்யப்படுவது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே காந்தி நினைவில்லம் பல்வேறு மாற்றங்களைச் சந்தித்துவருகிறது. முன்னதாக, 1948 ஜனவரி 20 அன்று காந்தியைக் கையெறி குண்டு மூலம் கொல்ல மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வி யுற்று, அந்தக் குண்டு தரையில் ஏற்படுத்திய சேதமானது அந்தச் சம்பவத்தை நினைவுகூரும் வகையில் பராமரிக்கப்பட்டுவந்தது; அது தற்போத சிமென்ட் கலவையால் பூசப்பட்டு, மறைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
“காந்தி என்றால் எளிமை; தன் வாழ்வே தான் விட்டுச்செல்லும் செய்தி என்று சொன்னவர் அவர். அவருடைய வரலாறு எளிமையாகவும் கண்ணியமாகவும் சொல்லப்பட வேண்டுமே தவிர டிஜிட்டல் என்ற பெயரில், வரலாறை மறைக்க முயற்சிக்கக் கூடாது என்று கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
இந்த சூழ்நிலையில்தான், காந்தி ஸ்மிருதியை பார்வையிட பொதுமக்களுக்கு மத்தியஅரசு தடை விதித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.