சென்னை: மகாத்மா காந்தியிடன் 156-வது பிறந்த நாளை முன்னிட்டி, காந்தி சிலைக்கு கவர்னர் ரவி,. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செய்தனர்.
நாடு முழுவதும் மகாத்மா காந்தியின் 156-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் குடியரசு தலைவர் பிரதமர் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் மலர்தூவி மரியாதை செய்தனர்.
சென்னையில் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு கிண்டி காந்தி மண்டபத்தில் உள்ள காந்தி சிலை மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. இங்கு கவர்னர் ஆர்.என்.ரவி வந்து, அங்குள்ள சிலைக்கு மாலை அணிவித்தும் காந்தியின் உருவ படத்துக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் மத்திய மந்திரி எல்.முருகன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் காந்தி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
அதுபோல, தமிழக அரசின் சார்பில் எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியக வளாகத்தில் உள்ள காந்தியின் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. சிலைக்கு அருகே காந்தியின் உருவப்படமும் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று காந்தியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினாார். அவருடன் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், ராஜ கண்ணப்பன், மா.சுப்பிர மணியன், பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா, தலைமைச் செயலாளர் முருகானந்தம், தமிழ்ச்சி தங்கபாண்டியன் எம்.பி., எம்.ஏல்.ஏ.க்கள் பரந்தாமன், ஏ.எம்.வி.பிரபாகரராஜா, முன்னாள் எம்.எல்.ஏ., ப.ரங்கநாதன் மற்றும் செய்தித் துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று காந்தி படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். பின்னர் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியிலும் பங்கேற்றனர்.