ஹாங்சோ:
ஜி20 உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட மோடி சவுதி துணை இளவரசை சந்தித்து பேசினார்.
சீனாவின் ஹாங்சோ நகரில் ஜி-20 நாடுகளின் இரண்டு நாள் உச்சி மாநாடு நடைபெற்று வருகின்றது. இந்த மாநாட்டில் அமைப்பில் உள்ள பல நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் மாநாட்டின் இடையே பிரதமர் நரேந்திர மோடி சவுதி அரேபியா துணை பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இருநாட்டு தலைவர்களும் இந்தியா சவுதி அரேபியா இடையிலான உறவுகள் குறித்து தீவிர ஆலோசனை நடத்தியதாக பிரதமரின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.சவுதி மன்னர் சல்மானின் மகனான முகமது அந்நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார கொள்கை விவகாரத்தில் முக்கிய பங்கு வகித்து வருகிறார்.முன்னதாக பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.