ஜி.டி.தேவகவுடா (மதசார்பற்ற ஜனதாதளம்)

பெங்களூரு:

ர்நாடக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாரதிய ஜனதா முன்னிலை வகித்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடகாவில் பாரதிய ஜனதா ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகி வருகிறது.

இந்நிலையில், கர்நாடக காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா, வருணா, பதாமி ஆகிய  இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார்.

இதில் பதாமி தொகுதியில்  முன்னிலை வகித்து வரும் சித்தராமையா, வருணா தொகுதியில் தோல்வியை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார்.

அதை எதிர்த்து போட்டியிட்ட மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியை சேர்ந்த ஜி.டி.தேவகவுடா, சித்தராமையாவை விட  11,624  வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

4வது சுற்று முடிவில் ஜி.டி.தேவகவுடா ர் சித்தராமையாவை விட 11,624 அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். இதன் காரணமாக இந்த தொகுதியில் சித்தராமையா வெற்றிபெறுவது கடினம் என்று கூறப்படுகிறது.