டெல்லி: ஜி 20 அமைப்பில் நிரந்தர உறுப்பினரான ஆப்பிரிக்க யூனியன் இணைய இந்திய பிரதமர் மோடி முன்மொழிந்த நிலையில், ஆப்பிரிக்க யூனியனை இணைத்து ஜி 20 மாநாட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, ஆப்பிரிக்க யூனியன் ஜி 20 அமைப்பு ஜி 21வது அமைப்பாக மாறுகிறது.
நடைபெற்ற ஜி20 பாலி உச்ச மாநாடு கடந்த ஆண்டு (2022ம் ஆண்டு) நவம்பர் 16ந்தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டின்போது பிரதமர் நரேந்திர மோடியிடம் ஜி20 தலைமைத்துவ பொறுப்பு வழங்கப்பட்டது. இந்தியாவின் ஓராண்டுகால ஜி20 தலைமைத்துவ பொறுப்பு 2002ம் ஆண்டு டிசம்பர்‘1ந்தேதி அன்று தொடங்கப்பட்டு வரும் நவம்பர் 30 ந்தேதி வரை உள்ளது. இதைத்தொடர்ந்து, ஜி20 18-வது உச்சிமாநாடு தொடர்பான பல்வேறு கூட்டங்கள் இந்தியாவில் நடத்தப்பட்டு வருந்தது. இதைத்தொடர்ந்து 2 நாள் ஜி20 உச்சி மாநாடு தலைநகர் டெல்லியில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் ஜி20 உச்சி மாநாடு நடப்பது இதுவே முதல்முறை. தலைநகர் டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்றும், நாளையும் ஜி20 மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட 40-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள், ஐரோப்பிய யூனியன் அதிகாரிகள், 14 சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இங்கிலாந்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ், தென் கொரிய அதிபர் யூன் சுக்-யோல், ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா, துருக்கிய அதிபர் தையிப் எர்டோகன், அர்ஜென்டினா அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸ், நைஜீரியாவின் அதிபர் போலா டினுபு, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்டோர் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.
டெல்லியில் உள்ள பிரகதி மைதானம், பாரத் மண்டபத்தில் ஜி20 கூட்டமைப்பின் 18ஆவது மாநாடு தொடங்கியது. ஒரே பூமி ஒரே குடும்பம் ஒரே எதிர்காலம் (One Earth, One Family, One Future) என்ற கருப்பொருளுடன் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில், நாட்டின் பெயரை குறிக்க பிரதமர் மோடியின் முன் வைக்கப்பட்டுள்ள பலகையில் ‘இந்தியா’ என்பதற்கு பதிலாக ‘பாரத்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், அனைத்து மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியே எங்களது நாட்டின் கொள்கை என தெரிவித்ததுடன், வளமான எதிர்காலத்திற்காக ஜி20 நாடுகள் இணைந்து செயல்படுவது அவசியம். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதை நாம் உலக அளவில் எடுத்துச் செல்ல வேண்டும் என்றார்.
போரினால் உலகளவில் இழந்துள்ள நம்பகத்தன்மையை மீட்டெடுக்க அழைப்பு விடுக்கிறேன் என கூறிய மோடி, நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய தருணம் இது என்றதுடன், பயங்கரவாதம், இணையப் பாதுகாப்பு, சுகாதாரம், எரிசக்தி உள்ளிட்டவற்றுக்கு உறுதியான தீர்வைக் காண வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
முன்னதாக, மாநாடு தொடங்கும் முன், ஜி 20 நாடுகளின் கூட்டமைப்பில் ஆப்பிரிக்க ஒன்றியம் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டது. இதற்கான முன்மொழிவை பிரதமர் மோடி கொண்டு வந்து பேசினார். அப்போது, இந்தியாவில் G20 மாநாடு சாதாரண மக்களின் G20 ஆக மாறியுள்ளது. கோடிக்கணக்கான இந்தியர்கள் இதில் தொடர்பு கொண்டுள்ளனர். இந்த மாநாட்டுக்கு முன்பு நாட்டின் 60-க்கும் மேற்பட்ட நகரங்களில் 200-க்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடைபெற்றன.
தற்போது, ஆப்பிரிக்க யூனியனை ஜி 20 இல் சேர்க்க இந்தியா முன்மொழிகிறது. இந்த அறிவிப்பை ஒவ்வொரு நாடும் ஏற்றுக் கொள்ளும் என நம்புகிறோம். ஆப்பிரிக்காவின் பிரசிடென்சியின் நிரந்தர உறுப்பினராக உங்கள் இருக்கையில் அமர உங்களை (அசாலி அசெளமனி) அழைக்கிறேன்.” என்று தெரிவித்தார். அதனை தொடர்ந்து, ஜி 20 நாடுகளின் கூட்டமைப்பில் ஆப்பிரிக்க யூனியன் நிரந்தர உறுப்பினராக இணைந்தது. நிரந்தர உறுப்பினரானதைக் குறிக்கும் வகையில் ஆப்பிரிக்க யூனியன் தலைவர் அசாலி அசெளமனி தனது இருக்கையில் அமர்ந்தார்.
ஆப்பிரிக்க ஒன்றியம் G20 உச்சிமாநாட்டில் இணைந்தது, “மகிழ்ச்சியடைந்த G20 ஆப்பிரிக்க ஒன்றியத்தை சேர்க்க ஒருமித்த கருத்தை உருவாக்கியது” இந்திய ஜனாதிபதி பதவிக்கு சுனில் பார்தி மிட்டல் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜி 20 உச்சி மாநாட்டின் 1வது அமர்வில், பிரதமர் நரேந்திர மோடி கொமரோஸ் ஒன்றியத்தின் தலைவரும், ஆப்பிரிக்க ஒன்றியத்தின் (ஏயு) தலைவருமான அசாலி அசுமானியை கட்டிப்பிடித்து, யூனியன் இன்று ஜி 20 இல் நிரந்தர உறுப்பினராகிறது.
இதையடுத்து, 55 நாடுகளைக் கொண்ட ஆப்பிரிக்க ஒன்றியம் ஜி20 மாநாட்டில் இணைந்தது. இதன்காரணமாக ஜி20, இனிமேல் ஜி21 மாநாடு என அழைக்கப்படும் என தெரிகிறது. ஜி20 மாநாட்டில் ஆப்பிரிக்க ஒன்றியம் இணைக்கப்பட்டதன் மூலம் ஜி 20 நாடுகளின் கூட்டமைப்பு மேலும் வலுவடைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.