சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்  தனது  எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த நிலையில்,  அன்றைய தினம் மாலையே  தவெக தலைவர் விஜய்யை அவரது வீட்டில் நேரில் சென்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு சுமார் 2மணி நேரம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அப்போது பல்வேறு அரசியல் நிகழ்வுகள் குறித்து இருவரும் விவாதித்ததாக தெரிகிறது.

2026 சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை கைப்பற்றுவோம் என்று கூறி, தேர்தல் களத்தில் குதித்துள்ள  நடிகர் விஜயின் தவெக. தங்களுக்கு திமுகவும், பாஜகவும்தான் எதிரி என்று கூறிக்கொண்டு தேர்தல் களப்பணியாற்றி வருகிறது. இந்த பரபரப்புக்கு மத்தியில், அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என குரல் கொடுத்த  மறைந்த ஜெயலலிதாவின் நிழாலாக செயல்பட்ட கோபி அதிமுக எம்எல்ஏ செங்கோட்டையன்.   கட்சியில் இருந்து எடப்பாடியால்  இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து, அவர் நேற்று (நவம்பர் 26) அன்று சட்டப்பேரவை செயலகம் வருகை தந்து. சபாநாயகர் அப்பாவிடம்  தனது எம்எல்ஏ பதவியை செங்கோட்டையன் ராஜினாமா  செய்வதாக அறிவித்து, அதற்கான கடிதத்தையும் கொடுத்தார்.

இதையடுத்து, அவரை திமுகவிற்கு இழுக்கும் முயற்சி நடைபெற்றது. அமைச்சர் சேகர்பாபு அவரை தலைமைச்செயலகத்திலேயே சந்தித்து பேசியது பரபரப்பானது. ஆனால், செங்கோட்டையன் எதற்கும் பதில் அளிக்காமல் சென்ற நிலையில், நேற்று மாலை,   தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்யின் இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்துள்ளார்.

ஏற்கனவே  செங்கோட்டையன். அவர் தவெக-வில் இணைய உள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், விஜய்யை செங்கோட்டையனே நேரில் சென்று சந்தித்திருப்பது அரசியலில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் வீட்டிற்கு தவெக முக்கிய நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவின் காரில் செங்கோட்டையன் சென்றார். அவரைத் தொடர்தந்து. முன்னாள் எம்பி சத்யபாமா உள்ளிட்ட செங்கோட்டையன் ஆதரவாளர்கள் தவெக தலைமை அலுவலகம் வருகை தந்தனர்.

தமிழக வெற்றிக் கழகம் தொடங்கியது முதலே எந்தவொரு பெரிய அரசியல் தலைவரும் விஜய்யை நேரில் சென்று சந்திக்காத நிலையிலும், தவெக-வில் இணையாத நிலையிலும் செங்கோட்டையன் முதல் நபராக விஜய்யை நேரில் சென்று சந்தித்திருப்பது  அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

விஜயுடன்  பேசியது என்ன?

இந்த சந்திப்பில் விஜய்யுடன் செங்கோட்டையன் கட்சியில் என்ன பதவி? என்ன அதிகாரம்? போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  மேலும் தனது ஆதரவாளர்களுக்கு கட்சியில் மற்றும் தேர்தலில் வாய்ப்பு வழங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

விஜய் தவெக-வை தொடங்கிய ஒரு ஆண்டுக்கும் மேலாக அவரது கட்சியில் எந்தவொரு பெரிய தலைவர்களும், அனுபவம் மிகுந்த அரசியல்வாதிகளும் இணையாமல் இருந்தனர். இந்த சூழலில், விஜய் கட்சி தொடங்கிய பிறகு இணைந்த முதல் அரசியல் ஆளுமையாக செங்கோட்டையன் உள்ளார்.

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சந்திப்பின்போது புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார் உள்ளிட்ட தவெகவின் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர். விஜயை சந்திக்க செங்கோட்டையன் தனது காரில் வராமல் ஆதவ் அர்ஜூனா காரில் பயணித்தார். 3 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற விஜய் – செங்கோட்டையன் சந்திப்பிற்கு பிறகு தவெக நிர்வாகிகள் ஒருவர் பின் ஒருவராக வெளியே வந்தனர். ஆனால் செங்கோட்டையன் யார் கண்ணிலும் சிக்காமல் சென்றார்.

எம்ஜிஆர் அதிமுக-வை தொடங்கிய காலகட்டம் முதல் அதிமுக-வின் பக்கபலமாக இருந்தவர் செங்கோட்டையன். செங்கோட்டையன் அதிமுக-வில் 9 முறை எம்எல்ஏ-வாக இருந்தவர். எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் முக்கிய தலைவராக இருந்தவர் செங்கோட்டையன். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகே மீண்டும் செங்கோட்டையனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், தினகரனுக்கு ஆதரவாக களமிறங்கி தற்போது அரசியல் வாழ்வை தொடங்கிய முதலே ஒரே கட்சியில் இருந்த செங்கோட்டையன் முதன்முறையாக தனது வாழ்வில் மற்றொரு கட்சியில் இணைய உள்ளார்.

கொங்கு மண்டலத்தில் முக்கியமான அரசியல் முகமாக திகழும் செங்கோட்டையன் தற்போது விஜய்யின் தவெக- கட்சியில் இணைந்திருப்பது தவெக ஆதரவாளர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது.