சென்னை: தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நடப்பு ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை சட்டப்ப பேரவையில் இன்று தாக்கல் செய்து வருகிறார். அதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. துறைவாரியாக, வளர்ச்சிப் பணிகளக்கு நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ள விவரங்களை வெளியிட்டுள்ளார்.
சுய உதவிக்குழு, விவசாய பயிர்க்கடன் வழங்க ரூ.4,130 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வட்டியில்லா பயிர்க்கடன் திட்டத்திற்கு ரூ. 200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் அறிவித்துள்ளார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ₨17,901 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
தமிழக பட்ஜெட்டில் கால்நடை பராமரிப்பு துறைக்கு ₨1,314 கோடி ஒதுக்கீடு
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ. 20, 400 கோடி நிதி ஒதுக்கீடு
நீர்வளத்துறைக்கு ₨7,338.36 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்தாண்டை காட்டிலும் ₨4296.35 கோடி கூடுதலாக நிதி ஒதுக்கீடு என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
நீர்வளங்களின் பயன்பாட்டை அதிகரிக்க, ரூ.3,384 கோடி நிதி ஒதுக்கீடு
அணைகள் புனரமைப்பு, பாதுகாப்புக்கு ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு
குறுவை சாகுபடிக்காக டெல்டாவைச் சேர்ந்த 10 மாவட்டங்களில் 4,694 கிமீ கால்வாய்களை தூர் வார ஒப்புதல், வட்டியில்லா பயிர்க்கடன் திட்டத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு.
பாசனத்திற்கான நீரை தங்குதடை இன்றி வழங்கவும், காவிரி பாசன அமைப்புகளை புனரமைத்தல் பணிகளுக்காகவும் ரூ.3,384 கோடி ஒதுகீடு.
சமத்துவபுர வீடுகளை சீரமைக்க ₨190 கோடி நிதி ஒதுக்கீடு
விளிம்புநிலை பழங்குடியின மக்களுக்கு 443 வீடுகள் கட்ட ₨20 கோடி நிதி ஒதுக்கீடு.
ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ரூ.4281 கோடி நிதி ஒதுக்கீடு
வனப்பகுதியில் வரையாடுகளை பாதுகாக்க 10 கோடி நிதி ஒதுக்கீடு
பல்லுயிரின பாதுகாப்புக்காக வள்ளலார் பல்லுயிர் காப்பகத்திற்கு ரூ . 20 கோடி நிதி ஒதுக்கீடு
அரசு நிலங்களை பராமரிக்க சிறப்பு நிதியாக ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் அரசு அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனை, உயர்தர மருத்துவமனையாக மேம்படுத்தப்படும்.
தமிழ்நாடு அரசின் எம்ஜிஆர் சத்துணவுத் திட்டத்திற்கு ரூ.1949 கோடி நிதி ஒதுக்கீடு
செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூரில் ரூ.25 கோடியில் சமூக மேம்பாட்டு மையம் அமைக்கப்படும்