வாஷிங்டன்: அமெரிக்காவில் முழுமையாக கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்டவர்கள், முகக்கவசம் இல்லாமல் சிறிய குழுவாக சேரலாம் என்று அந்நாட்டின் நோய்க் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்புத் துறை கூறியுள்ளது.

இதுதொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது; முழுவதுமாக கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்டவர்கள், முகக்கவசம் இல்லாமல் சிறிய குழுவாக சேரலாம். இது சிலவகையான சந்தர்ப்ப சூழல்களுக்கு மட்டும்தான்.

அதேசமயம், வேறுபல சூழல்களில் அவர்கள் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வழிமுறைகளைப் பின்பற்றி, கொரோனா நோய் பரவுவதை தடுக்க வேண்டும். அவர்கள் பொது இடங்களில் செல்கையில், முகக்கவசத்தை கட்டாயம் அணிந்துகொண்டு, சமூக இடைவெளியைப் பின்பற்றுவதோடு, தடுப்பூசி எடுத்துக்கொள்ளாத மக்கள் மத்தியில் புழங்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஏனெனில், தடுப்பு மருந்து எடுத்துக்கொண்டவர்களுக்கும் வைரஸ் தொற்று ஏற்படலாம். அவர்கள், பலவீனமான உடல்நிலை கொண்டவர்களுக்கு தொற்றிவிடக்கூடிய அபாயம் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.