சென்னை:
மிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமாகி உள்ள நிலையில், சென்னை உள்பட முழு ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ள 6 மாவட்டங்களில் நாளை எந்தவித தளர்வுகளும் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதையொட்டி காவல்துறையினர் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து,  சென்னை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களின் சில பகுதிகளிலும், 19ம் தேதி முதல், முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன் பின், மதுரை, தேனி மற்றும் அவற்றை சுற்றியுள்ள பகுதிகளிலும், முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
இந்த மாவட்டங்களில்  முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருந்தாலும், காய்கறி கடைகள், மளிகை கடைகள் போன்றவை மதியம் வரை செயல்படலாம் என்பது உட்பட, சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது.
ஆனால்,  நாளை எவ்வித தளர்வுகளுமின்றி, சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப் பட உள்ளது. எனவே, பொதுமக்கள் வீடுகளிலேயே இருந்து, கொரோனா பரவலை தடுக்க ஒத்துழைக்க வேண்டும் என, சுகாதாரத் துறை அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.
ஏற்கனவே இரு ஞாயிற்றுக்கிழமைகளில் எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும்  என்ற நிலையில், 21–ந்தேதி சென்னை உள்பட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், நாளை (28–ந்தேதி)  சென்னை உள்பட 6 மாவட்டங்களில் எந்தவித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
இதையொட்டி நாளை அத்தியாவசிய தேவைக்காக பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்துக் கடைகள், மருத்துவமனை ஊர்திகள், அவசர மற்றும் அமரர் ஊர்திகள் தவிர வேறு எந்த விதமான செயல்பாடுகளுக்கும் அனுமதி கிடையாது.
அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.
நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் மாவட்டங்கள் விவரம்:
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, தேனி,