திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் கோரோனா தொற்று தீவிரமடைந்து வருவதால், வரும் 8ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை முழு ஊரடங்கு விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா 2வது அலை நாடு முழுவதும் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தினசரி பாதிப்பு 4 லட்சத்தை கடந்துள்ளதுடன், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பல மாநிலங்களில் தொற்று பரவலை தடுக்க பகுதி நேர ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தி வருகின்றன. மகாராஷ்டிரை, டெல்லி போன்ற சில மாநிலங்களில் முழு நேர ஊரடங்கும் போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கையாக  கேரளாவில் முழு ஊரடங்கு வரும் 8ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை நடைமுறைப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையில், கேரள மாநிலத்திற்கு ஆக்சிஜ%ன் மற்றும் கொரோனா தடுப்பூசிகள் தேவை என முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். அவரது கடிதத்தில், வெளிநாடுகளில் இருந்து  இறக்குமதி செய்யப்பட்டுள்ளதில்,  1000 டன் ஆக்சிஜனை கேரளாவுக்கு வழங்குமாறு வெளியுறவு அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

மாநிலத்தில்வ   கொரோனா வேகமாக பரவி வருவதால் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது என்றும்,  இந்த சூழ்நிலையில், போதுமான இருப்புக்களை உருவாக்க மத்திய அரசின்  உதவி தேவை என்றும்  பினராயி விஜயன் கூறியுள்ளார். மேலும்  ஏதேனும் ஒரு ஆக்சிஜன் ஆலையிலிருந்து 500 டன்  ஆக்சின் ஒதுக்கீடு செய்வதையும் மத்திய அரசு கருத்தில் கொள்ள வேண்டும் ,  கொரோனா தடுப்பு  இரண்டாவது  ஊசிக்காக காத்திருப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் 50 லட்சம் டோஸ் கோவிட்ஷீல்டு தடுப்பூசிகளும்  25 லட்சம் டோஸ் கோவேக்சின் தடுப்பூசிகளும் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.