காலாவதியான மற்றும் நிராகரிக்கப்பட்ட உணவுப் பொருட்களின் தரவுகளை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சமர்ப்பிக்க வேண்டும் என்று உணவு வணிக நிறுவனங்களுக்கு FSSAI உத்தரவிட்டுள்ளது.

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) டிசம்பர் 16 அன்று வெளியிடடுள்ள இந்த உத்தரவு, ரீபேக் செய்பவர்கள் மற்றும் மறுசீரமைப்பு செய்பவர்களுக்கும் பொருந்தும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

உரிமம் பெற்ற உணவு உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள், நிராகரிக்கப்பட்ட மற்றும் காலாவதியான உணவுப் பொருட்களின் காலாண்டுத் தரவை உணவுப் பாதுகாப்பு ஒழுங்குமுறை அமைப்பான FSSAI-யின் ஆன்லைன் இணக்க அமைப்பு FOSCOS மூலம் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

புதிதாக மாற்றியமைக்கப்பட்டுள்ள தரவு தளத்தில், உள் தர சோதனை அல்லது ஆய்வில் தோல்வியுற்ற தயாரிப்புகளின் எண்ணிக்கை, உணவு விநியோகச் சங்கிலியிலிருந்து காலாவதியான அல்லது திரும்பிய பொருட்களின் அளவு மற்றும் அழிவு, ஏலம் அல்லது மாற்று பயன்பாடு உள்ளிட்ட தயாரிப்புகளை அகற்றுவதற்கான விரிவான பதிவுகள். குறிப்பிட்ட வாங்குபவர் மற்றும் கழிவுகளை அகற்றும் முகவர் தகவல் உள்ளிட்டவைகளை பதிவிட வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

காலாவதியான மற்றும் நிராகரிக்கப்பட்ட உணவுப் பொருட்களை மாட்டுத் தீவனம் என்ற போர்வையில் மறுபெயரிடுவதையும் மறுவிற்பனை செய்வதையும் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

FSSAI இந்த முயற்சியால் நிராகரிக்கப்பட்ட அல்லது காலாவதியான பொருட்களை நிகழ்நேர கண்காணிப்பு மற்றும் மனித நுகர்வு நோக்கங்களுக்காக அவற்றை அப்புறப்படுத்துதல் அல்லது ஏலம் விடுதல் ஆகியவற்றை செயல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உணவுப் பொருட்களை விநியோகம் செய்யும் இ-காமர்ஸ் நிறுவனங்கள் பொருட்களின் காலாவதிக்கு குறைந்தபட்சம் 45 நாளுக்கு முன் வழங்க அறிவுறுத்தல்