சுட்டெரிக்கும் கோடை வெயிலில், இந்தத் தலைப்பைப் பார்த்தவுடன் திகைக்க வேண்டாம் !
நமது தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் மூன்று பருவங்கள் தான் எப்போதும்-வெப்பம்! மிக அதிகமான வெப்பம் !! நரகத்திற்கு ஈடான வெப்பம் !!!
இதைத் தவிர மழையோ, பனியோ, குளிரோ வேறு எந்த வானிலையும் கிடையாது.
இந்த நிலையில், நான் வெப்பநிலை மிகவும் குறைந்து நகரமே உறைநிலையில் இருந்தது என்று கூறினால் யாரேனும் என்னை நம்புவீர்களா?
அதுவும், புழுக்கமான மாதமான இந்த ஏப்ரல் மாதத்தில்? இது அநேகமாக ஒரு ஏப்ரல் ஃபூல் ஜோக் என்று உதாசீனப்படுத்தப்படும்.
இருந்தும் இது சரியாக 200 ஆண்டுகளுக்கு முன்பு ஏப்ரல் 1815 கடைசி வாரத்தில் நடந்தது. ஏப்ரல் 24 ம் தேதி திங்கட்கிழமை காலை வெப்பநிலை 11 டிகிரி செல்சியஸாக இருந்தது, ஏப்ரல் 28 வெள்ளியன்று மைனஸ் 3 டிகிரி செல்சியஸ் வரை குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பனி விழுந்து என்று கூட சில சரிபார்க்கப்படாத தகவல்கள் உள்ளன ஆனால் அது ஒரு மிகைப்படுத்தலாக இருக்கக் கூடும்.
தொலைதூர இந்தோனேஷியாவிலுள்ள தம்போரா மலையின் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு தான் இந்த அதிசய நிகழ்விற்கு காரணம். அந்த நேரத்தில், 4,300 மீ உயரத்தில் இருந்த தம்போரா மலை தான் அந்த நாட்டை உள்ளடக்கியத் தீவுகளிலேயே மிக உயரமான சிகரமாக இருந்தது. 1815 ஏப்ரல் 10 மற்றும் 11 அன்று அதிலிருந்து எரிமலைக்குழம்பு வெடித்த போது அதன் தாக்கம் 2,000 கி.மீ. தூரம் வரை கேட்கப்பட்டது மட்டுமின்றி சுமார் 12,000 பேர் கொல்லப்பட்டனர். அது தான் இன்று வரை உலக வரலாற்றிலேயே பெரிய எரிமலை செயல்பாடு என்ற சாதனையை தக்கவைத்துள்ளது.
அதற்குப் பின் என்ன நடந்தது என்பதை கில்லென் டி’ஆர்க்கி வுட் என்பரின் உலகை மாற்றிய தம்பொரிய வெடிப்பு ( தம்போரா: தி எரப்ஷன் தட் செஞ்ச்ட் தெ வல்ர்ட்) என்ற புத்தகத்தில் சிறப்பாக விவரிக்கப்பட்டுள்ளது. “தம்போராவின் தூசி அலை, மேல் வளிமண்டலத்தின் காற்று மூலம் மேற்கு நோக்கி நகரத் தொடங்கியது. அதன் காற்றோட்டமான பாதை இந்தியா நோக்கி சென்று இந்திய பெருங்கடலின் வணிக துறைமுகங்களில் வீசி, சில நாட்களுக்குள் வங்காள விரிகுடாவில் புகுந்தது “.
இரண்டு வாரங்கள் கழித்து சென்னை தான் அதை முதலில் உணர்ந்தது, வெப்பநிலை உறைநிலைக்குச் சென்றது. எரிமலை மேகத்தில் இருக்கும் தூசுப்படலம் சூரியன் மற்றும் பூமியில் இருந்து வெப்பத்தை உறிஞ்சியது. எனினும், இந்த விசித்திர நிகழ்வைப் பற்றி கிழக்கு இந்திய கம்பெனியின் ஏடுகளில் எந்த குறிப்பும் இல்லை. சுனாமி பற்றியும் எந்த குறிப்பும் இல்லை. எனினும், கடற்கரையில் சிறு காலத்திற்கு படிகக்கல் ஒதுங்கியிருந்தது. அதனையடுத்து நடந்தது எதுவும் இனிமையாக இல்லை. சாம்பல் மேகம் உலகளவில் பரவி 1816 ஆண்டை ‘கோடை இல்லாத ஆண்டாக’ மாற்றியது. சென்னையிலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும், இது பருவமழை இல்லாத ஆண்டாக இருந்தது. வெளிநாடுகளைப் போல இந்தியாவிலும் பயிர்கள் வாடின. பஞ்சத்தை தொடர்ந்து காலராவும் இந்தியாவில் வந்தது, ஆனால் இப்போது அறிஞர்கள் எரிமலையைக் காரணமாகக் கூறுகின்றனர். 70,000 மக்களுக்கு மேலானோர் தம்போரா காரணமாக அழிந்தனர்.
ஆகஸ்ட் 1815 ஆம் ஆண்டில், பிரிக் கத்ரீனா – வெடிப்பிற்குப் பிறகு ஜாவாவில் இருந்து முதல் கப்பல் சென்னை வந்து சேர்ந்தது. தி ம்டராஸ் கூரியர் அந்த கப்பலின் காப்டனிடம் என்ன நடந்தது என்று விளக்கம் கேட்டு பேட்டியெடுத்தனர். அவர் எரிமலை சாம்பலை கொண்டு வந்திருந்தார், பின்னர் அது ஆய்வுக்காக கல்கத்தா அனுப்பப்பட்டது. ஆனால் யாரும் அந்த சென்னையின் உறைநிலையை எரிமலையுடன் இணைக்கவில்லை.