டில்லி
நாளை சுசீல் சந்திரா புதிய தலைமைத் தேர்தல் ஆணையராகப் பதவி ஏற்கிறார்.

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையராகப் பதவியில் உள்ள சுனில் அரோரா ஓய்வு பெறுகிறார். அதையொட்டி புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுசீல் சந்திரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் நாளை பதவி ஏற்க உள்ளார்.
புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக நாளை முதல் பதவி வகிக்க உள்ள சுசீல் சந்திரா வரும் 2022 ஆம் ஆண்டு மே மாதம் 14 வரை பதவியில் இருப்பார். இந்த காலகட்டத்தில் கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட், பஞ்சாப், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.
Patrikai.com official YouTube Channel