சென்னை

மிழகத்தில் பொறியியல் படிப்புக்கு நாளை முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 12 ஆம் வகுப்புத் தேர்வுகள் கொரோனா அச்சுறுத்தலால் ரத்து செய்யப்பட்டன.  அதையொட்டி மாணவர்கள் வகுப்பு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் இறுதி மதிப்பெண்கள் அளிக்கப்பட்டுள்ளன.   அந்த மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலம என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் பொறியியல் கல்லூரியில் சேர நாளை முதல் ஆகஸ்ட் 24-ஆம் தேதி வரை www.tneaonline.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ரேண்டம் என் ஆகஸ்ட் 25-ஆம் தேதியும், தரவரிசைப் பட்டியல் செப்டம்பர் 4-ஆம் தேதியும் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை சிறப்பு இட ஒதுக்கீடு பிரிவில் இடம் பெற்றுள்ள மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.

அதன் பிறகு பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு செப்டம்பர் 14-ஆம் தேதி முதல் அக்டோபர் 4-ஆம் தேதி வரையிலும் துணை கலந்தாய்வு அக்டோபர் 12-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரையிலும், ஆதிதிராவிடப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு அக்டோபர் 18-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரையும் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.