யோத்தி

ன்று முதல் அயோத்தி ராமர் கோவிலில் பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

இந்து மதக் கடவுள் ராமர் கோவில் உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ளது. நேற்று ராமர் கோவில் பிரதிஷ்டை விழா நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், திரைப்பிரபலங்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

நேற்று கோவில் பிரதிஷ்டை முடிவடைந்ததால் இன்று முதல் பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டதையடுத்து அதிகாலையிலிருந்தே ஆயிரக்கணக்கானோர் ராமர் கோவிலில் குவிந்து வருகின்றனர்.

பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால் கோவிலில் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. பக்தர்கள் முண்டியடித்துக்கொண்டு கோவிலுக்குள் நுழைய முயன்றதால், சிலர் கீழே விழுந்தனர். அங்கு பணியில் இருந்த பாதுகாவலர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.