மதுரை
இன்று முதல் மதுரை விமான் நிலையத்தில் இரவு நேர விமான சேவை தொடங்குகிறது.
சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி, ஐதராபாத் உள்ளிட்ட உள்நாட்டு நகரங்களுக்கும், இலங்கை, துபாய், சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் மதுரை விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, மதுரை விமான நிலையத்தில், காலை 8.10 மணி முதல் இரவு 9.05 மணி வரை விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன.
ஆரமபத்தில் மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்படும் என அறிவிக்கப்பட்ஃபும் அவ்வாறு இயங்காமல் பகல் நேரங்களில் மட்டுமே விமான சேவை இருந்து வந்தது. எனவே மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றி, 24 மணி நேரமும் செயல்பட வைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர்.
கடந்த அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி முதல், மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்படும் என அறிவிப்பு வெளியானது. மேலும் இரவு நேரங்களில் விமானங்கள் இயக்குவது தொடர்பாக பல்வேறு விமான நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுஅதன் அடிப்படையில் மதுரையில் இருந்து சென்னை வழியாக மலேசியாவின் பினாங்கு நகருக்கு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் புதிய விமான சேவை தொடங்கப்பட உள்ளது.