நியிங்சி

சீனாவில் அருணாசலப் பிரதேசத்துக்கு அருகில் உள்ள நியிங்சிக்கு இன்று முதல் புல்லட் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.

சீனாவில் திபெத் தலைநகரான லாசாவில் இருந்து நியிங்சி வரை புல்லட் ரயில் பாதையைச் சீன அரசு அமைத்துள்ளது.  இந்த பாதை சுமார் 436 கிமீ தூரம் உள்ளதாகும்.  இதில் நியிங்சி நகர் அருணாசலப் பிரதேச மாநிலத்தில் இருந்து 80 கிமீ தொலைவில் உள்ளது.

வரும் ஜூலை 1 ஆம் தேதி அன்று சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு கொண்டாட்டம் நடைபெற உள்ளது.,   இதையொட்டி சீனாவில் பல்வேறு புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன.  அவ்வகையில் புல்லட் ரயில் திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது.

இன்று முதல் லாசா முதல் ரியிங்சி வரையிலான புல்லட் ரயில் சேவை தொடங்குகிறது.  அதையொட்டி இன்று முதல் புல்லட் ரயில் ரியிங்சி நகருக்கு வந்து சேர்ந்துள்ளது.