சென்னையில் செப்டம்பர் 26 முதல் உலக மகளிர் டென்னிஸ் போட்டி

Must read

சென்னை

ரும் செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 26 ஆம் தேதி வரை சென்னையில் உலக மகளிர் டென்னிஸ் போட்டிகள் நடைபெற உள்ளன.

சென்னையில் கடந்த 21 ஆண்டுகளாக உலக மகளிர் டென்னிஸ் சென்னை ஒப்பன் போட்டிகள் நடந்து வருகின்றன.  ஆனால் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இந்த போட்டிகள் புனேவில் நடைபெற்று வருகின்றன.  தமிழக முதல்வர் இந்த போட்டிகள் மீண்டும் சென்னையில் நடைபெறும் என அறிவித்திருந்தார்.

அதையொட்டி இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், “கடந்த  21 ஆண்டுகளாக சென்னையில் நடைபெற்று வந்த சென்னை ஓபன், 2017ம் ஆண்டு முதல் புனேவில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு முதல் மீண்டும் சென்னை ஓபன் நடைபெறும் என முதல்வர் அறிவித்திருந்த நிலையில் உலக மகளிர் டென்னிஸ் போட்டி தற்போது சென்னையில் நடைபெற உள்ளது.

வரும் செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி முதல் WTA எனப்படும் பெண்கள் டென்னிஸ் சங்கம் சார்பில் சென்னையில் உலக மகளிர் டென்னிஸ் போட்டி நடத்தப்படும். அக்டோபர் 26 வரை நடைபெறும் சென்னை ஓபன் டென்னிஸ் நடத்துவதற்காக இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதையொட்டி உலக மகளிர் டென்னிஸ் போட்டி நடத்த முதற்கட்டமாக ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார்.

More articles

Latest article