சென்னை

ரும் ஜூலை 1 முதல் தெற்கு ரயில்வே இயக்கும் அனைத்து ரயில் எண்களும் மாற்றப்பட உள்ளன.

தெற்கு ரயில்வே கடந்த பிப்ரவரி மாதம் முதல் அனைத்து மெமு, டெமு, பயணிகள் சிறப்பு ரயில்கள் அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும் எனவும், கொரோனா கட்டுப்பாட்டுக்கு முன்பு வசூலித்த பழைய கட்டணமே வசூலிக்கப்படும் எனவும் அறிவித்தது.

தற்போது இந்த முன்பதிவில்லா சிறப்பு ரெயில்களுக்கான எண்கள் வழக்கமான பயணிகள் ரெயில்களுக்கான எண்களாக மாற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தெற்கு ரயில்வே தலைமையகத்தில் இருந்து அனைத்து கோட்ட பொதுமேலாளருக்கும் சுற்றறிக்கை வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ,

“கொரோனா பரவலுக்கு பின்பு அனைத்து பயணிகள் ரயிலும் முன்பதிவில்லா சிறப்பு ரெயில்களாக மாற்றி இயக்கப்பட்டன. இந்த ரயில்களின் எண்களும் பூஜ்ஜியத்தில் ஆரம்பிக்கும் வகையில் மாற்றப்பட்டன. இந்நிலையில், தெற்கு ரயில்வேயில் இயங்கும் அனைத்து முன்பதிவில்லா ரெயில்களின் எண்களையும் மாற்றி மீண்டும் 5, 6, 7 என தொடங்கும் பழைய எண்களை அறிவிக்க ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

தெற்கு ரயில்வேயில் இயங்கும் 288 பயணிகள் ரயில்கள் மற்றும் 8 மலைப்பாதை ரெயில்களின் எண்கள் ஜூலை 1-ந்தேதி முதல் பழைய எண்களைக் கொண்டு இயக்கப்பட உள்ளது.

அந்தவகையில், சென்னை கடற்கரைதிருவண்ணாமலை இடையே இயக்கப்படும் பயணிகள் ரயில் (வண்டி எண்.06033) என்ற எண்ணுக்கு பதிலாக (66033) என்ற எண்ணிலும், சென்னை எழும்பூர்புதுச்சேரி இடையே இயக்கப்படும் பயணிகள் ரயில் (06025) என்ற எண்ணுக்கு பதிலாக (66051) என்ற எண்ணிலும் இயக்கப்பட உள்ளது. இதேபோல 288 பயணிகள் ரெயில்கள் மற்றும் 8 மலைப்பாதை ரெயில்கள் என மொத்தம் 296 ரயில்களின் எண்கள் மாற்றி இயக்கப்பட உள்ளன.”

என்று கூறப்பட்டுள்ளது.