சென்னை; ஜனவரி 1ஆம் தேதி முதல் எக்ஸ்பிரஸ் ரயில்களில் புறப்படும் நேரம் மாற்றம்   செய்யப்படுவதாக அறிவித்துள்ள தெற்கு ரயில்வே அதுதொடர்பான  புதிய அட்டவணையை வெளியிட்டுள்ளது.

மாற்றியமைக்கப்பட்ட புதிய கால அட்டவணையானது தேசிய ரயில்வே விசாரணை அமைப்பு (NTES) என்ற செயலியில் வெளியாகி இருக்கிறது. அதன்படி எந்தெந்த ரயில்களில் இனி எந்தெந்த நேரங்களில் புறப்படும் என்பது குறித்த முழு விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வே கட்டமைப்பை மேம்படுத்தும், நவீனப்படுத்தும் முயற்சிகளை தொடர்ந்து மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகத்தை அதிகரிக்கும் வகையில் தண்டவாளங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அதேபோல பல்வேறு வழித்தடங்களிலும் மின்மயமாக்கல் பணிகளும் முடிவடைந்துள்ளன. இதனால் புதிய ரயில்கள், சிறப்பு ரயில்கள், நீட்டிப்பு செய்யப்பட்ட ரயில்கள் உள்ளிட்டவை புதிய கால அட்டவணையில் இடம்பெற உள்ளன.

கடந்த ஏப்ரல் மாதமே புதிய கால அட்டவணை வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பழைய அட்டவணையின் படியே ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில் புதிய ரயில் நேர கால அட்டவணை 2026 ஜனவரி மாதம் வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த புதிய கால அட்டவணையின் படி பல்வேறு ரயில்களின் புறப்படும் நேரம், நீட்டிப்பு ரயில்கள் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற உள்ளது. இந்த மாற்றியமைக்கப்பட்ட புதிய கால அட்டவணையானது தேசிய ரயில்வே விசாரணை அமைப்பு (NTES) என்ற செயலியில் வெளியாகி இருக்கிறது.

2026 கால அட்டவணை: புதிய ரயில் கால அட்டவணையின்படி,

சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற ஜனவரி 1ஆம் தேதி முதல் எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து காலை 10.20 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக இனி காலை 10:40 மணிக்கு புறப்படும்.

இதேபோல எழும்பூரில் இருந்து இரவு 8.40 மணிக்கு புறப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் இனி இரவு 8.50 மணிக்கு புறப்படும்.

இதே போல எழும்பூரில் இருந்து காலை 7:45 மணிக்கு திருச்சிக்கு புறப்படும் சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் இனி 8 மணிக்கு புறப்படும்.

பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 8.10 மணிக்கு பதிலாக இனி இரவு 7.35 மணிக்கு முன்கூட்டியே புறப்படும்.

இதேபோல எழும்பூரில் இருந்து இரவு 7:15 மணிக்கு புறப்படும்  ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் 8.35 மணிக்கு புறப்படும்.

எழும்பூரில் இருந்து மதியம் 1:45 மணிக்கு மதுரை புறப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் இனி 1.15 மணிக்கு முன்கூட்டியே புறப்பட்டு விடும்.

எழும்பூரில் இருந்து மதியம் 2.45 மணிக்கு நெல்லை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இனி மாலை 3.05 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல எழும்பூரில் இருந்து இரவு 7:30 மணிக்கு தூத்துக்குடி செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் இனி 7.15 மணிக்கு முன்கூட்டியே புறப்படும்.

பெங்களூருவில் இருந்து சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயில் மாலை 3.10 மணிக்கு இனி 3.15 மணிக்கு புறப்படும்.

நேரம் மாற்றப்படாத ரயில்கள்:

அதே நேரத்தில் எழும்பூரில் இருந்து கொல்லம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ். எழும்பூரில் இருந்து திருச்செந்தூர் செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களின் நேற்று நேரம் மாற்றப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல மின்சார ரயில் நேரங்களும் மாற்றி அமைக்கப்பட்டு புதிய அட்டவணை விரைவில் வெளியாக இருப்பதாக தெற்கு ரயில்வே வட்டாரம் தெரிவித்துள்ளது.

மறுமார்க்கத்தில்..

இதேபோல மறு மார்க்கத்தில் நெல்லையிலிருந்து எழும்பூர் வரும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 8.40 மணிக்கு பதிலாக 8.50 மணிக்கு புறப்படும்.

செங்கோட்டையிலிருந்து மாலை 6:45 மணிக்கு புறப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் 6.50 மணிக்கு புறப்படும்.

ராமேஸ்வரத்தில் இருந்து மாலை 5.50 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் இனி 6 மணிக்கு புறப்படும்.

திருச்சியில் இருந்து காலை 11 மணிக்கு புறப்படும் சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் இனி மதியம் 12.10 மணிக்கு புறப்படும்.

தூத்துக்குடியில் இருந்து எழும்பூர் வரும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் இனி 8.40 மணிக்கு பதிலாக இரவு 9 மணிக்கு புறப்படும்.

இதே போல குருவாயூர், நெல்லை வந்தே பாரத், வைகை எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களின் மறு மார்க்கமாக புறப்படும் நேரத்தில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

 

[youtube-feed feed=1]