சென்னை: ரேசன் கடைகளில் வழங்கப்படும் அரிசிக்கு தனித்தனியாக ரசீது வழங்கப்பட வேண்டும் என தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, மத்திய-மாநில அரசுகள் வழங்கும் ரேசன் அரிசிக்கு தனித்தனியாக ரசீது வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டில், அனைத்து நியாயவிலை கடைகளிலும் புதிய முறையினை பின்பற்றி குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் பொழுது புதிய முறைப்படி அரிசியினை மற்றும் மத்திய அரசு ஒதுக்கீட்டில் முதல் ரசீது ஆகவும், அரிசி மற்றும் இதர பொருட்களை இரண்டாவது ரசீதாக மாநில அரசு ஒதுக்கீட்டிலும் பதிவு செய்து பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய, மாநில அரசுகள் சார்பில் வழங்கும் அரிசி அளவுக்கு ஒரே ரசீது வழங்கப்பட்டு வந்த நிலையில் தனித்தனியாக ரசீது வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. ஜனவரி ஒன்றாம் தேதி முதல் அனைத்து நியாய விலைக்கடைகளிலும் புதிய நடைமுறைகளை கடைபிடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
உதாரணத்திற்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 கிலோ அரிசி என்றால் அதில் மத்திய அரசு வழங்கும் 15 கிலோ அரிசிக்கு ரசீது தனியாகவும், மாநில அரசு வழங்கும் 5 கிலோ அரிசிக்கும் தனித்தனியாக ரசீது வழங்க வேண்டும். ஜனவரி ஒன்றாம் தேதி முதல் அனைத்து நியாய விலைக்கடைகளிலும் புதிய நடைமுறைகளை கடைபிடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
புதிய விதிமுறைகளை கடைபிடிக்காமல், பொருட்களை விநியோகம் செய்தால் அதற்குண்டான தொகையை சம்பந்தப்பட்ட அலுவலர்களே செலுத்த நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.