சென்னை: எழும்பூர் ரயில் நிலையில், வரும் ஏப்ரல் 5ந்தேதி முதல் சென்னை கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில் சேவை பழைய நடைமேடைகளில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, மீண்டும் நடைமேடை எண் 10 மற்றும் 11ல் இயங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நடைமேடையில் பகுதியில் நடைபெற்று வந்த பணிகள் முடிவடைந்ததால், ஏப்ரல் 5 முதல் பழைய நடைமேடைகளில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை மாநகர மக்களின் அன்றாட தேவையின் ஒரு அங்கமாக மின்சார ரயில் சேவை உள்ளது. சென்னை மட்டுமின்றி புறநகர் வாசிகளுக்கும், மின்சார ரெயில் சேவை இன்றியமைதாததாக உள்ளது. புறநகர் மக்களின் முதுகெலும்பாகத் திகழும் கடற்கரை – தாம்பரம் இடையிலான மின்சார ரயில் சேவை, வரும் ஏப்ரல் 5-ஆம் தேதி முதல் மீண்டும் பழைய ரயில் பாதையில் இயக்கப்பட உள்ளது.
ஏற்கனவே எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்புப் பணிகளுக்காகக் கடந்த பிப்ரவரி மாதம் முதல் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வந்த 10, 11 நடை முறை அடைக்கப்பட்டு, அதற்கு பதிலாக நடைமேடை 5 மற்றும் 6ல் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. மேலும் பாதி அளவுக்கு ரயில்களும் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.
இந்த நிலையில், பழைய நடைமேடை பகுதியில் அமல்படுத்தப்பட்டிருந்த தற்காலிக மாற்றங்கள் முடிவுக்கு வருவதால், மீண்டும் அந்த பாதையில் ரயில்களை இயக்க ரயில்வே முன்வந்துள்ளது., ஆயிரக்கணக்கான தினசரி பயணிகள் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர்.
‘முன்னதாக, எழும்பூர் ரயில் நிலையத்தை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ், நடைமேடை எண் 10 மற்றும் 11-க்கு அருகில் முக்கியமான அடித்தளப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காகப் பிப்ரவரி 20-ஆம் தேதி முதல் ஏப்ரல் 5-ஆம் தேதி வரை 45 நாட்களுக்குத் ‘டிராபிக் பிளாக்’ எனப்படும் ரயில் போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் பணிகளை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் முடிப்பதற்காக, சுமார் 600-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் சுழற்சி முறையில் இரவு பகலாகப் பணியமர்த்தப்பட்டனர். நவீன இயந்திரங்கள், கிரேன் மற்றும் கான்கிரீட் கலவை இயந்திரங்கள் உதவியுடன் அடித்தளம் அமைக்கும் பணிகள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளன.
மறுசீரமைப்புப் பணிகளின் போது, நடைமேடை 10 மற்றும் 11-க்கு பதிலாக 5 மற்றும் 6-வது நடைமேடைகளிலிருந்து மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன. மேலும், ரயில்களின் இயக்க இடைவெளியும் குறைக்கப்பட்டதால், புறநகர் ரயில்களையே முழுமையாக நம்பியிருக்கும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி னர். கூட்ட நெரிசலைக் குறைக்க ரயில்வே நிர்வாகம் சார்பில் சிறப்பு ரயில்கள் மற்றும் விரைவு ரயில்கள் இயக்கப்பட்டன. அத்துடன், மாநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC) சார்பாகக் கூடுதல் பேருந்துகளும் இயக்கப்பட்டன. இருப்பினும், நேரடி மின்சார ரயில் சேவைக்கு மாற்றாக இந்தப் பேருந்துகள் அமையாததால், பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவியது.
ஏப்ரல் 5-ஆம் தேதி முதல், புறநகர் மின்சார ரயில்கள் மீண்டும் வழக்கம் போல 10 மற்றும் 11-வது நடைமேடைகளில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
எழும்பூர் நிலையத்தின் புதிய கட்டமைப்புப் பணிகளான நடைமேம்பாலங்களுக்கான அடித்தளம், 72 மீட்டர் அகலமுள்ள புறப்பாட்டு முனையம் (Departure Concourse) மற்றும் 25 மீட்டர் நீளமுள்ள கூரைப் பகுதிகள் அமைக்கும் பணிகள் தற்போது முடிந்துள்ளன. இதன் மூலம் மின்சார ரயில்களின் வேகம் மற்றும் நிறுத்தங்களில் இருந்த தடைகள் நீக்கப்படுகின்றன.
[youtube-feed feed=1]