புதுடெல்லி:
வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், ஏப்ரல் 1 முதல் வருமான வரி விவரங்களை தெரிவிக்க புதிய வழிமுறைகளை வருமான வரித்துறை கையாளவுள்ளது.
வரி செலுத்துவோர் குறித்த விவரம், சொத்து விவரத்தை இவற்றின் வாயிலாக வருமான வரித்துறை பெறும்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு தவறுதலாக பலர் வரி செலுத்துவோராக கணக்கிடப்பட்டனர். தற்போது தெரிவிக்கும் விவரங்கள் அடிப்படையில், அந்த தவறு நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வருமான வரித்துறையின் போர்ட்டலை எளிதாக கையாளும் வகையில் வகையில், நடவடிக்கை எடுக்குமாறு, தங்கள் அதிகாரிகளை வருமான வரித்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
வருமான வரித்துறையின் போர்ட்டலில் தரப்படும் விவரங்கள் 2 வகையாகப் பிரிக்கப்படும்.
முதலாவது வகையில், முகவரி,கையெழுத்து, மற்றும் வரி செலுத்தும் விவரம் இருக்கும். இரண்டாவது வகையில், வரிசெலுத்தவதற்கான அளவுகோல் இடம்பெற்றிருக்கும்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, பெரும் தொகை டெபாஸிட் செய்தது குறித்தும் அதிகாரிகள் கண்காணிப்பார்கள்.