திருப்பதி
வரும் 17 ஆம் தேதி முதல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டாள் திருப்பாவை சேவை தொடங்க உள்ளது.
கடந்த 3 நாட்களாக ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் அதிகமாகக் காணப்பட்டது. குறிப்பாகச் சனிக்கிழமை அன்று திருப்பதியில் கோவிந்தராஜர் கோயில், பத்மாவதி தாயார் கோயில், கபில தீர்த்தம், அலமேலு மங்காபுரம் ஆகிய தேவஸ்தான கோயில் களிலும் கடந்த சனி, ஞாயிறு கிழமைகளில் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.
இதில் ஞாயிறு மட்டும் 28,476 பேர் ஏழுமலையானைத் தரிசித்து ரூ. 2.59 கோடி உண்டியல் காணிக்கை செலுத்தி உள்ளனர். 13,203 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்டு தோறும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 11 மாதங்கள் வரை ஏழுமலை யானுக்கு சுப்ரபாத சேவை அதி காலை நடைபெறுவது ஐதீகம். அந்நேரத்தில் சுவாமி துயில் எழுப்பப்பட்டு, அன்றைய நாளின் இதர சேவைகள் தொடர்ந்து நடைபெறும்.
தமிழ் மாதமான மார் கழி மாதத்தில் மட்டும் ஆண்டாள் அருளிய திருப்பாவையைப் பாடி ஏழுமலையான் துயில் எழுப்பப் படுகிறார். டிசம்பர், 16-ம் தேதி இந்த ஆண்டு மார்கழி மாதம் பிற்பகல் 12.26 மணிக்குப் பிறப்பதால், மறுநாள் 17-ம் தேதி முதல் ஜனவரி மாதம் 14-ம் தேதி வரை திருப்பாவை சேவை நடத்தப்படும் எனத் திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.