முதன்முதலாகத் தமிழ்ப் படமொன்றில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஹர்பஜன் சிங். ‘பிரண்ட்ஷிப்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ஜே.பி.ஆர் மற்றும் ஷாம் சூர்யா இருவரும் இணைந்து இயக்கவுள்ளனர்.

Seantoaa Films மற்றும் Cinemass Studio இணைந்து தயாரிக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்த லாஸ்லியா ஹர்பஜன் சிங் உடன் ‘பிரண்ட்ஷிப்’ என்ற படத்தில் நடிக்கிறார்.

ஆக்ஷன் கிங் அர்ஜுன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.சதிஷ்,குக் வித் கோமாளி பாலா உள்ளிட்டோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீஸர் மற்றும் பாடல்கள் வெளியாகி செம ட்ரெண்ட் அடித்தது. தற்போது இந்த படத்தின் சென்சார் வேலைகள் நிறைவடைந்து படத்திற்கு யூ /ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.