பெங்களூரு

ர்நாடகா தேர்தல் 2018 புதிய கருத்துக்கணிப்பின் படி காங்கிரசுக்கு பெரும்பான்மை கிடைக்கும் என தெரிய வந்துள்ளது.

வரும் 12 ஆம் தேதி கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.   இதை ஒட்டி கருத்துக் கணிப்பு ஒன்று நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகின.  அதில் காங்கிரஸும் பாஜகவும் சமநிலையில் வெற்றி பெரும் எனவும் தொங்கு சட்டசபை உருவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.   இதனால் இரு கட்சிகளும் தங்கள் தேர்தல் பரப்புரையை இன்னும் தீவிரமாக்கி உள்ளன.

இந்நிலையில் புதிய கருத்துக் கணிப்பு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.  சி ஃபோர் என்னும் நிறுவனம் நடத்திய இந்த கருத்துக் கணிப்பில் மொத்தம் 6247 பேரிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது.   இந்த கருத்துக் கணிப்பு முடிவுகளில் 95% நம்பிக்கைக்கு இடம்  உள்ளதாகவும்  2% வரை ஏற்றத் தாழ்வு வரலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய கருத்துக் கணிப்பின்படி  மொத்தமுள்ள 224 தொகுதிகலில் காங்கிரசுக்கு 118 முதல் 128 இடங்கள் வரை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  பாஜகவுக்கு 63 முதல் 73 இடங்களும் மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு 29 முதல் 36 இடங்கள் கிடக்கும் எனவும் கருத்துக் கணிப்பு கூறுகிறது.

கருத்துக் கணிப்பில் காணப்படும் சிறப்பு அம்சங்கள்

பெங்களூரு நகரத்தில் மொத்தமுள்ள 28 இடங்களில் 17 முதல் 19 இடங்கள் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது.  

18-25 வயதான இளைஞர்களில் 45% பேர் காங்கிரசுக்கு ஆதரவு அளிக்கின்றனர்.

பெண்களில் 45% பேர் காங்கிரசுக்கு ஆதரவாக உள்ளனர்.

தாவன்கரே, சிவமோகா மற்றும் சித்ரதுர்கா மாவட்டங்களில் மட்டுமே காங்கிரஸ் பலவீனமாக உள்ளது.

மற்ற அனைத்து மாவட்டங்களிலும் தற்போது காங்கிரஸ் அலை வீசுகிறது.