பிரான்ஸ் நகரின் தேவாயலத்திற்கு துப்பாக்கியால் மிரட்டி சிலை கொண்டவன் வலதுசாரி வன்முறையாளர் என்பது தெரிய வந்துள்ளது. அவன்,  இஸ்லாமிய பயங்கரவாதி என்ற போர்வையில், இந்த படுபாதக செயலை செய்ததும் தெரிய வந்துள்ளது.

முகமது நபியின் கேலிச்சித்திரங்களை மாணவர்களுக்குக் காட்டிய பிரெஞ்சு ஆசிரியர் தனது பள்ளிக்கு வெளியே தலை துண்டிக்கப்பட்டு மரணமடைந்தார். சமூக வலைத்தள அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து அப்துல்லாக் அன்சோரோவ் என்ற 18 வயதான இளைஞர் சாமுவேல் பணி புரிந்த பள்ளிக்கு வெளியே சாமுவேலை 30 செமீ நீளமான கசாப்புக் கத்தியால் பலமுறை தாக்கியுள்ளார். தாக்குதல் நடத்திய அப்துல்லாக் அன்சோரோவைக் காவலர்கள் சுற்றி வளைத்தபோது அவர் காவலர்களைத் தாக்க முயற்சித்துள்ளார். ஆகையால், அவரைக் காவலர்கள் சுட்டுக் கொன்றனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  இஸ்லாம் குறித்து சர்ச்சைக்குறிய கருத்தைக் கூறிய பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரானுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன.  பிரெஞ்சு ஊடகங்கள், தொடக்கத்தில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியவர் “அல்லாஹூ அக்பர்” என்று முழங்கியதாகச் செய்தி வெளியிட்டு இது ஒரு இசுலாமிய தாக்குதல் என்ற கருத்தைப் பரப்பின என்று பிரிட்டனின் இண்டிபெண்டென்ட் செய்தி தெரிவிக்கிறது.

உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்கள், பிரான்ஸ் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும் என்ற போராட்டத்தை முன்னெடுத்தனர். இதன் ஒரு பகுதியாக டிவிட்டரில், மேக்ரான் ஒரு பிசாசு “MacronTheDevil” “ShameOnYouMacron”, “Boycott_French_Products” ஆகிய ஹாஷ் டேக்குகள் உலக அளவில் டிரெண்ட் ஆகின.

இந்த நிலையில், அந்த நபர்  தீவிர வலதுசாரி அமைப்பான `தலைமுறை அடையாளம்’ (Generation Identity)-ஐச் சேர்ந்தவன் என்பது தெரிய வந்துள்ளது. அந்த நபர்  வெளிநாட்டவர் விரோத அமைப்பின் மேல் சட்டையை அணிந்திருந்ததாக காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர். இதன் காரணமாக அந்த நபர் `தலைமுறை அடையாளம்’  சேர்ந்தவராக இருக்கலாம் என்று தெரிவித்து உள்ளது.

ஆனால், அதற்கு , “தலைமுறை அடையாளம்” அமைப்பின் ஆஸ்திரிய தலைவர் மார்ட்டின் செல்னர் மறுப்பு தெரிவித்து உள்ளார்.  இதுதொடர்பாக அவர் தனது டெலிகிராம் பக்கத்தில், அவிக்யானில் கொல்லப்பட்டவரின் படத்தைத் பகிர்ந்து,  இந்த நபர்  அடையாள இயக்கத்தைச் சேர்ந்தவர் என்று சொல்கிறார்கள். அவர் ‘தலைமுறை அடையாளம்’ அமைப்பின் மேல் சட்டை அணிந்திருந்தார். ஆனால், அந்தச் சட்டையை யார் வேண்டுமானாலும் இணையத்தில் வாங்கிக்கொள்ளலாம்” என்று கூறியுள்ளார்.

ஐரோப்பா முழுவதும் செயல்படும் “தலைமுறை அடையாளம்” அமைப்பு, “வெள்ளையின மக்கள் ஐரோப்பாவிலிருந்து இடம் பெயர்க்கப்பட்டு வருகிறார்கள். முஸ்லிம்களை ஐரோப்பிய கண்டத்திலிருந்து ‘வெளியேற்றம்’ செய்ய வேண்டும்” என்று பிரச்சாரம் செய்து வருகிறது. சென்ற ஆண்டு நியூசிலாந்தின் கிறிஸ்ட் சர்ச் நகரில் 51 பேர் உயிரிழந்த மசூதிகளின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை நிகழ்த்தியவர் “தலைமுறை அடையாளம்” அமைப்பின் மைய சித்தாந்தத்தின் பெயரைத் தனது பிரகடனத்தின் தலைப்பாகப் பயன்படுத்தியிருந்தார்.

“அந்த நபர் 2018-ல் ஆல்ப்ஸ் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றவரும் இல்லை. எங்களது பிரெஞ்சுக் கிளையின் உறுப்பினரும் இல்லை. அடையாள இயக்கம் எப்போதுமே பயங்கரவாதத்தையும் வன்முறையையும் நிராகரிக்கிறது. வன்முறையற்ற அரசியல் செயல்பாட்டைத்தான் நாங்கள் கடைப்பிடிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.