பிரஞ்சு ஓப்பன் டென்னிஸ் போட்டியில் தோல்வி அடைந்து துவண்டு போன மகுத் ஐ அவர் மகன் சமாதானம் செய்துள்ளார்.

 

பொதுவாக எந்த ஒரு போட்டியிலும் குழந்தைகள் தோல்வி அடையும் போது துவண்டு விடுவார்கள்.   குழந்தைகளால் எந்த ஒரு தோல்வியையும் தாங்க முடியாததே இதன் காரணமாகும்.   அவர்களின் பெற்றோர்கள் அந்த குழந்தைகளை சமாதானம் செய்வது வழக்கம் ஆகும்.

பிரெஞ்ச் ஒப்பன் டென்னிஸ் போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் பிரான்ஸ் நாட்டின் நிகோலஸ் மகுத் மற்றும்  அர்ஜெண்டினாவின் லியானார்டோ மேயர் ஆகிய இருவரும் மோதினர்.  இந்த போட்டியில் தோல்வி அடைந்த மகுத் துவண்டு போய் அமர்ந்து விட்டார்.

இதைக் கண்ட சிறுவனான் மகுத்தின் மகன் மைதானத்துக்குள் ஓடிச் சென்று தந்தையை தழுவிக் கொண்டு சமாதானம் செய்துள்ளார்.  இந்த போட்டியில் வெற்றி பெற்ற மேயர் அந்த சிறுவனை கைதட்டி பாராட்டி உள்ளார்.   அதை தொடர்ந்து அரங்கமே கைதட்டலில் மூழ்கி உள்ளது.

மகனின் பாசத்தால் சமாதானம் அடைந்த மகுத் அரங்கை விட்டு மகனுடன் வெளியேறினார்.  மகனின் கை கோர்த்தபடி சென்ற மகுத் மற்றும் அவர் மகனுடிய வீடியோ சமூக வலை தளங்களில் பரவி வைரலாகிறது

நமது வாசகர்களுக்காக இதோ அந்த வீடியோ :

[youtube https://www.youtube.com/watch?v=ALmqdg-77zU]

.