பாரிஸ்: தற்போது நடைபெற்றுவரும் பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரில், நோவக் ஜோகோவிக், செக் குடியரசின் கரோலினா பிலிஸ்கோவா மற்றும் கிறிஸ்டினா பிலிஸ்கோவா ஆகியோர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில், செர்வியாவின் ஜோகோவிக், ஸ்வீடன் நாட்டின் மைக்கேல் எமெரை, 6-0, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி, இரண்டாவது சுற்றுக்கு நகர்ந்தார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில், கரோலியான பிலிஸ்கோவா, எகிப்தின் மாயர் ஷெரீபை 6-7, 6-2 மற்றும் 6-4 என்ற செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு சென்றார்.

அதே செக் குடியரசின் மற்றொரு வீராங்கணையான கிறிஸ்டினா, சுலோவேகியாவின் விக்டோரியாவை 6-1, 6-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி, இரண்டாவது சுற்றுக்கு சென்றார்.