பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது. இறுதி போட்டியில் தைவான் இணையை வீழ்த்தியது சாத்விக் இந்தியாவின் ராங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றனர்.

இந்த வெற்றியின் மூலம் சிராக் ஷெட்டி மற்றும் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி ஜோடி BWF சூப்பர் 750 கிரீடத்தை வென்ற முதல் இந்திய இரட்டையர் ஜோடி என்ற பெருமையையும் பெற்றது.

இருவரும் 2019 பிரெஞ்ச் ஓபன் இறுதிப் போட்டியில் இந்தோனேஷிய வீரர்களிடம் தோல்வியை தழுவி பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்தனர்.

பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இரட்டையர் பிரிவில் 39 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா சாம்பியன் பட்டம் வென்று சாதனை பிடித்துள்ளது.

1983 இல் பார்த்தோ கங்குலி மற்றும் விக்ரம் சிங்கின் வெற்றிக்குப் பிறகு இந்திய ஆண்கள் இரட்டையர் ஜோடி பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் பட்டத்தை வென்றது இதுவே முதல் முறையாகும்.