சென்னை:
மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இலவச பயணம் குறித்த அரசாணை வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கும் அவர்களுடன் செல்லும் ஒரு உதவியாளருக்கும் அரசு பேருந்துகளில் பயணிக்க இலவசம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சாதாரண நகர பேருந்துக்களில் கட்டணம் இல்லா பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. பயணத்தின் போது மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையை பேருந்து நடத்துடனரிடம் காண்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தமிழக அரசு பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம் என்ற அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அன்றாடம் வேலைக்கு செல்லும் பெண் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக நன்றி தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.