காஞ்சிபுரம்
நேற்று காஞ்சிபுரத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்ர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறும். அங்குள்ள மக்கள் நல்லுறவு மைய கூட்ட அரங்கில் திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்படு வது வழக்கமாகும்.
அவ்வகையில். நேற்று நடைபெற்ற, கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து 232 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த கூட்டத்தில் நேற்று காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் மண்டலம் வையாவூர் சேர்ந்த 4 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
நேற்று நடந்த இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியருடன் மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பொது ரவிச்சந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் பாபு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.