டில்லி,

டெலிகாம் துறையில் அதிரடி சலுகைகளை வழங்கி கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை தன் பக்கம் இழுத்த ரிலையன்சின் ஜியோ கடந்த மாதம் இலவச 4ஜி போன் அறிவிப்பு வெளியிட்டது.

அதன்படி கடந்த ஆகஸ்டு மாதம் முன்பதிவு செய்தவர்களுக்கு நாளை முதல் இலவச 4ஜி போன் விநியோகம் செய்யப்படும் என தெரிகிறது.

1500 டெபாசிட் செய்தால் ஜியோவின் 4ஜி போன் இலவசமாக கிடைக்கும் என ரிலையன்ஸ் அறிவித்தது. கடந்த ஆகஸ்டு மாதம் 24ந்தேதி இதற்கான முன்பதிவு தொடங்கியது.  இதன்படி முன்பதிவு செய்யும்போது, ரூ.500 செலுத்தி முன்பதிவு செய்தால் ஜியோ 4ஜி ஸ்மார்ட்போன் இலவசமாக வழங்கப்படும். போன் டெலிவரி செய்யும்போது மீதமுள்ள 1000 ரூபாய் செலுத்த வேண்டும்.

இந்த 1500 ரூபாய்  டெபாசிட்டாக ஏற்றுக்கொள்ளப்பட்டு,  மூன்று வருடங்களுக்குப் பிறகு திருப்பிக் கொடுக்கப்படும் என்று அறிவிப்பு செய்யப்பட்டது.

ரிலையன்சின் இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே பெருத்த வரவேற்பு பெற்றது.  லட்சக்கணக்கா னோர் இலவச ஜியோ போனுக்காக முன்பதிவு செய்திருந்தனர். அப்படி முன்பதிவு செய்தவர்க ளுக்கு செப்டம்பர் 24 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் 4ஜி போன் விநியோகம் செய்யத் தொடங்கப்படுகிறது என்ற செய்தி வெளியாகியுள்ளது.

இதுகுறித்து ரிலையன்ஸ் ஜியோ விற்பனை பிரிவு அதிகாரி கூறியதாவது,

ஏற்முகனவே முன்பதிவு செய்து வாடிக்கையாளர்களுக்கு ஜியோபோன் விநியோகம் நாளை தொடங்குகிறது என்றும், இந்த போன்கள் அனைத்தும் குறைந்தபட்சம் 10 முதல் 15 நாட்களுக்குள் வாடிக்கையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று கூறினார்.

முதல்கட்டமாக இந்த போன் கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்,  பின்னர் புறநகர், நகர்ப்புற வாடிக்கையாளர்களுக்கும் விநியோகிக்கப்படும் என்றும் இதற்காக 60லட்சம் போன்கள் தயாராக இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.