Skip to content

today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்

தமிழ் செய்தி இணையதளம்

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
  • Youtube
தமிழ் நாடு

ஜூலை மாதத்திற்கும் ரேசனில் இலவச உணவுபொருட்கள்… எடப்பாடி அறிவிப்பு

Jul 3, 2020

சென்னை:

கொரோனா தொற்று பரவலால், தமிழகத்தில் ஜூலை மாதம் 30ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதால், இந்த மாதமும் (ஜூலை) ரேசனில் இலவசமாக பொருட்கள் வழங்க உத்தரவிடப்பட்டு இருப்பதாக தமிழக  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள  அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்படுகிறது. அதன்படி கடந்த 3 மாதங்களாக அரிசி, பருப்பு, சர்க்கரை,கோதுமை, சமையல் எண்ணெய் ஆகிய பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டன.
தறபோது ஜூலை 31-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள சூழ்நிலையை கருத்தில்கொண்டு தமிழ்நாட்டில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜூலை மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும், அதாவது ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய், அசிரி குடும்ப அட்டைதாரர்களுக்கு கடந்த 3 மாதங்களில் வழகிய அசிரி அளவின்படி, கூடுதல் அரிசியுடன் நியாய விலைக்கடைகளில், விலையின்றி வழங்க தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது.
வருகின்ற 6-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை குடும்ப அட்டைதாரர்களுக்கு அவரவர் வீடுகளிலேயே டோக்கன் வழங்கப்படும். பொருட்கள் வழங்கப்படும் நாள், மற்றும் நேரம் குறிப்பட்டிருக்கும். சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் தத்தமது நியாய விலைக்கடைகளுக்கு 10.07.2020 முதல் சென்று பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.
தடை செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அவரவர் வீடுகளுக்கே சென்று அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும்.
பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும், தங்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை விலையில்லாமல் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Post navigation

வேலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 96 பேருக்கு கொரோனா உறுதி..
வேலூர் கார்த்தியாயினி, முன்னாள் திமுக வி.பி.துரைசாமி, சர்ச்சை புகழ்  சசிகலா புஷ்பா, நடிகை நமீதா உள்பட பலருக்கு பாஜகவில் பதவி…

Related Post

தமிழ் நாடு வர்த்தக செய்திகள்

இன்று சென்னையில் பெட்ரோல் டீசல் விலை

ஆன்மிகம் தமிழ் நாடு

இன்று காலை 7.30 மணி முதல் திருப்பரங்குன்றம் கோவிலில் தரிசனத்துக்கு அனுமதி

தமிழ் நாடு

நாளை சென்னையில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ள இடங்கள்

உலகம்

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உலகம்

ஜப்பானில் ஒரே நொடியில் 1000 படங்களை பதிவிறக்கம் செய்து சாதனை

July 13, 2025 mullai ravi
உலகம்

கொரிய உணவில் சுவையை கூட்டுவதற்காக உலர்ந்த எறும்புகளைச் சேர்த்த உணவகம் மீது நடவடிக்கை…

July 11, 2025 Sundar
உலகம்

ஆகஸ்ட் 1 முதல் கனடா மீது 35% வரி விதிப்பு தொடர்பான கடிதத்தை அனுப்பினார் அமெரிக்க அதிபர் டிரம்ப்…

July 11, 2025 Sundar
உலகம்

மலேசிய மாடல் அழகியை கோயிலுக்குள் அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பூசாரி தலைமறைவு…

July 10, 2025 Sundar
உலகம்

அமெரிக்க விமான நிலையங்களில் காலணிகளை சோதனை செய்வது நிறுத்தம்…

July 9, 2025 Sundar

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer