டெல்லி:
மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இன்று விவசாயிகள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், தெருவோர வியாபாரிகள், விற்பனையாளர்கள், சிறு வணிகர்கள், சுயதொழில் செய்பவர்கள் மற்றும் சிறு விவசாயிகள் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
8 கோடி புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 2 மாதம் விலையில்லா உணவு தானியங்கள் மற்றும் 100 நாட்கள் வேலை திட்டத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று கூறினார்.
அவர் கூறியதாவது,
8 கோடி புலம்பெயர் தொழிலாளர்களுக்கு விலையில்லா உணவு தானியங்கள் கிடைக்கும்.
புலம்பெயர் தொழிலார்களுக்கு அடுத்த இரு மாதங்களுக்கு விலையில்லா அரிசி அல்லது கோதுமை வழங்கப்படும்.
அடுத்த 2 மாதங்கள் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு விலையில்லா உணவு தானிங்கள் வழங்க ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கீடு.
ரேஷன் கார்டு இல்லாத புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் உணவு பொருள் வழங்கப்படும்.
வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் 23 மாநிலங்களில் அமல்படுத்தப்படும். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 100% அமல்படுத்தப்படும்.
புலம்பெயர் தொழிலார்களுக்கு மாதத்திற்கு 5 கிலோ அரிசி அல்லது கோதுமை மற்றும் ஒரு கிலோ பருப்பு ஆகியவை விலையில்லாமல் வழங்கப்படும்.
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு குறைந்த வாடகையில் வீடுகள் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு முகாம்கள் அமைக்கவும், உணவு வழங்கவும் ரூ.11,000 கோடி மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
நகர்ப்புறங்களில் வீடற்றவர்களை தங்கவைக்கும் முகாம்களில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலார்களுக்கு 3 வேலை உணவு வழங்கப்படுகிறது.
100 நாள் வேலைத்திட்டத்தின் மூலமாக மே 13 ஆம் தேதி வரை 14.62 கோடி மக்களுக்கு வேலை நாட்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
கொரோனா காலத்தில் 100 நாள் வேலைத்திட்டத்திற்காக ரூ.10 ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.
100 நாள் வேலைத் திட்டத்தில் ஒரு நாளுக்கான ஊதியம் ரூ.182 இல் இருந்து ரூ.202 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
100 நாள் வேலைத்திட்டத்தில் சொந்த ஊர் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களை பணியமர்த்தும் முயற்சி நடைபெற்று வருகிறது.
கடந்த ஆண்டு மே மாதத்தை விட, நடப்பு மே மாதத்தில் 40-50% வரை கூடுதலான மக்கள் 100 நாள் வேலை திட்டத்தில் பதிவு செய்துள்ளனர்.