நெல்லை:
நாளை நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், கேரளாவில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ள மாணவர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளை நெல்லையில் இருந்து கேரளாவுக்கு தமிழக போக்குவரத்துதுறை இயக்குகிறது.
இந்த ஆண்டு மருத்துவ கல்விக்கான நீட் தேர்வு எழுதும் தமிழகத்தை சேர்ந்த 1500 மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தமிழக மாணவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், மாணவர்களின் வசதியை கருத்தில்கொண்டு, கேரளாவில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு நெல்லையில் இருந்து 8 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த சிறப்பு பஸ் இன்று காலை முதல் இரவு வரை தொடர்ந்து இயக்கப்படும் என்றும், இதில் இலவசமாக மாணவர்கள் பயணம் செல்லலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு பஸ்களை நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, ராதாபுரம் அதிமுக எம்.எல்.ஏ., இன்பத்துரை ஆகியோர், மாணவர்களுக்கு குடிநீர் பாட்டில், சிற்றுண்டி வழங்கி தொடங்கி வைத்தனர்.