புவனேஸ்வர்

சுமார் 27 பெண்களை மணந்து ஏமாற்றித் தலைமறைவாகிய ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த  பிபு பிரகாஷ் ஸ்வாயின் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளது

ஏமாற்றுபவனை விட ஏமாறுபவன் மிகப் பெரிய தவற்றுக்குக் காரணமாகிறான்.   அவனை ஏமாற்றி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மற்றவர்களையும் ஏமாற்றத் தொடங்குகிறான்.  குறிப்பாகப் பெண்களைத் திருமணம் செய்து ஏமாற்றுபவர்கள் அனைவரும் ஒரு முறை ஏமாற்றி விட்டால் தொடர்ந்து ஏமாற்றத் தொடங்கி விடுகின்றனர்.   இவ்வாறு ஏமாற்றுபவர்களிடம் தொடர்ந்து பெண்கள் ஏமாறுவது வழக்கமாகி வருகிறது.

தற்போது ஒடிசா மாநிலத்தில் 27 பெண்களை ஏமாற்றியதாக கூறப்படும் தலைமறைவாக இருந்த புபு பிரகாஷ் ஸ்வாயின் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.    இவர் ஒடிசாவில் கேந்திரபாரா மாவட்டம் பட்குரா என்னும் சிற்றூரை சேர்ந்தவர் ஆவார்.  இவருக்கு தற்போது 58 வயதாகிறது.    ஆயினும் இளமை ததும்பும் உடற்கட்டுடன் பார்க்கவும் இளைஞர் போல தோற்றமளித்து வருகிறார்.

இவருடைய மனைவிக்கு இவருக்கு வேறு பெண்களுடன் தொடர்பு உள்ளதாகச் சந்தேகம் எழவே கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்..  இதை அறிந்த பிபு தலைமறைவானார்.    இவரைத் தீவிரமாகத் தேடி வந்த காவல்துறையினர் காந்தகிரி பகுதியில் ஒரு வாடகை வீட்டில் இருபதை கண்டு அவரைக் கைது செய்துள்ளனர்.    அப்போது அவரிடம் 11 ஏடிஎம் அட்டைகள், 4 ஆதார் அட்டைகள், கல்வி சான்றிதழ்கள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளது/

காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பிபு 27 பெண்களை ஹ்டிருமணம் செய்துள்ளது தெரிய வந்துள்ளது.  இவர் முதலில் 1982 ஆம் வருடம் முதல் திருமணம் செய்த்ல்லார்.  பிறகு அடுக்கடுக்காக மணம் செய்துள்ளார்.  இது வரை திருமணம் செய்து கொண்ட 27 பெண்களிடம் இருந்தும் ஏமாற்றி பணம் பறித்துத் தலைமறைவாகி அடுத்த பெண்ணிடம் ஆட்டையை போட தொடங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

அவர் குறி வைப்பது எல்லாமே விதவைகள், நடுத்தர வயதுப் பெண்கள்,மற்றும் விவாகரத்து ஆனவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.  அவர் இதுவரை ஒடிசா, அசாம், டில்லி, பஞ்சாப் என பல மாநிலப் பெண்களை மணமுடித்து ஏமாற்றி உள்ளார்.  முதலில் அதிகாரிகளின் கேள்விகளுக்குச் சரிவர பதில் அளிக்காத பிபு சிறிது சிறிதாக உண்மைகளைத் தெரிவித்து வருகிறார்.  இவரிடம் விசாரணை மேலும் தொடர்கிறது.