பாரீஸ்:
பிரான்ஸ் நாட்டில் போலீஸ் காவலில் இருந்த இளம் கறுப்பின நபர் ஒருவர் மர்மமாக மரணமடைந்ததை அடுத்து அங்கு ஏற்பட்ட கலவரம் தொடர்கிறது.
பிரான்ஸ் நாட்டில் வட பாரிஸில் உள்ள நகர் ஒன்றில், அடாமா ட்ரேயோரி என்பவர் வழக்கு ஒன்றுக்காக காவல்துறையினரால் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார். அப்போது அவர் மரணமடைந்தார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக காவல்துறை கூறுகிறது. ஆனால், அவர் ஆரோக்கியமாக இருந்ததாகவும், காவல்துறையினரால் தாக்கப்பட்டதாலேயே இறந்தார் என்றும் அவரது அவரது நண்பர்கள் கூறியுள்ளனர்.
மரமடைந்த அடாமா ட்ரேயோரியின் உடல் இன்று வியாழனன்று உடற்கூறு பரிசோதனைக்கு ஆட்படுத்தப்பட உள்ளது. இதன் முடிவு வெளியான பிறகு உண்மை வெளிப்பட வாய்ப்பு இருக்கிறது.
இதற்கிடையே இரண்டாவது நாளாக, அங்கு மோதல்கள் நடந்து வருகின்றன. அதிகாரிகள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. வன்முறையில் ஈடுபட்டதாக இதுவரை எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.