லண்டன்:
ர்நாடக தொழிலதிபர் விஜய்மல்லையா இந்தியாவிலிருந்து தப்பித்து சென்று, தற்போது லண்டனில் தங்கி இருக்கிறார்.
தனது வியாபார நிறுவனங்களுக்காக தொழிலதிபர் விஜய் மல்லையா, பாரத ஸ்டேட் வங்கி உட்பட பல்வேறு வங்கிகளில் வாங்கிய கடன் வட்டியுடன் சேர்த்து ரூ.9,000 கோடிக்கு மேல் நிலுவையில் உள்ளது.

தொழிலதிபர் விஜய் மல்லையா
தொழிலதிபர் விஜய் மல்லையா

இதுபோல் ஐடிபிஐ வங்கியில் ரூ.900 கோடி வாங்கி மோசடி செய்துள்ளார். மத்திய அமலாக்கத்துறை பல முறை நோட்டீஸ் அனுப்பியும், மல்லையா ஆஜராகவில்லை. கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தும் மல்லையா வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்பவில்லை.
இந்தியாவில் வாங்கிய கடன்கள் பற்றி  லண்டனில் இருந்து வெளியாகும் ஆட்டோ ஸ்போர்ட் என்ற இதழுக்கு அவர் அளித்த திமீர் பேட்டியில் கூறியிருப்பதாவது:
எனது பாஸ்போர்ட் இந்திய அரசால் ரத்து செய்யப்பட்டு விட்டதால் நான் எப்படி இந்தியா வர முடியும்.  நான் ஒன்றும் தலைமறைவாக இல்லை. என்மீதான வழக்கு தொடர்பாக அவர்கள் கிங்பிஷர் விமான நிறுவன அதிகாரிகள் பலரையும் விசாரித்து விட்டனர். என்னிடம் விசாரணை நடத்துவது ஒன்றுதான் பாக்கி.
தேவைப்பட்டால் இந்திய அதிகாரிகள் லண்டனுக்கு வந்து என்னிடம் விசாரணை நடத்தட்டும். அல்லது ரேடியோ கான்பரன்சிங்கில் பேசட்டும். இ-மெயிலில் கேள்விகளை அனுப்பினால் கூட பதிலளிப்பேன்.
நான் எதையுமே மறைக்க விரும்பவில்லை. மற்றபடி அவர்கள் கூறுவதுபோல் நான் மறைந்து வாழவில்லை. கைது வாரண்டை பிறப்பித்து விட்டு, பாஸ்போர்ட்டையும் ரத்து செய்து விட்டனர். அப்படி இருக்கும்போது நான் எப்படி இந்தியாவுக்கு வர முடியும் என்று கூறி உள்ளார்.