பாரிஸ்
சேவல் குஞ்சுகளைக் கொல்ல பிரான்ஸ் அரசு தடை விதித்துள்ளதற்குப் பறவைகள் ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
உலகெங்கும் சுமார் 7000 கோடி சேவல் குஞ்சுகள் ஒவ்வொரு வருடமும் கொல்லப்படுகின்றன. இந்த சேவல் குஞ்சுகளால் முட்டை இட முடியாது என்பதும் இதை அதிக அளவில் இறைச்சிக்காக பயன்படுத்த முடியாது என்பதுமே இதற்குக் காரணம் ஆகும்.. இந்த சேவல் குஞ்சுகள் உயிருடன் வெந்நீரில் அழுத்தப்பட்டோ அல்லது விஷ வாயு செலுத்தப்பட்டோ கொல்லப்படுகின்றன.
இதற்கு உலகெங்கும் உள்ள பல பறவைகள் நல ஆர்வலர்கள் க்டும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இம்முறை ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் சமீபத்தில் தடை செய்யப்பட்டது. இங்கு இந்த பழக்கம் அதிகமாக காணப்படுவதில்லை. அத்துடன் இந்த பழக்கம் அதிகமாக உள்ள ஜெர்மனியில் இதே தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் வருடத்துக்கு 45 கோடி சேவல் குஞ்சுகள் கொல்லப்படுகின்றன.
தற்போது பிரான்ஸ் அரசு சேவல் குஞ்சுகளைக் கொல்லும் அனைத்து முறைகளுக்கும் தடை விதித்துள்ளது. இது குறித்து அந்நாட்டு விவசாயத்துறை அமைச்சர் டிடியர் கில்லியம், :ஆண்டு தோறும் 45 கோடி சேவல் குஞ்சுகள் கொல்லப்படுகின்றன. அதைத் தடுக்க இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சேவல் குஞ்சுகளை முட்டை பருவத்திலேயே கண்டறிய ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தற்போதுள்ள முறைப்படி மிகச் சிறிய அளவில் இந்த சோதனை வெற்றி அடைந்துள்ளது. இந்த வெற்றி முழு அளவில் மாற மேலும் ஆய்வுகள் நடைபெறுகின்றன. இந்த ஆய்வு வரும 2021 ஆம் ஆண்டு இறுதிக்குள் வெற்றிகரமாக முடிவடையும் என நம்புகிறேன். அவ்வாறு முடிந்த பிறகு தேவைக்கு மேல் சேவல் குஞ்சுகள் பிறப்பது முழுவதுமாக நின்று போகும்.” எனத் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் அரசின் இந்த தடைக்கு உலகெங்கும் உள்ள பறவ௯கள் நல ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.