
அக்டோபர் 29ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்த கன்னட சூப்பர் ஸ்டாரான புனீத் ராஜ்குமாரின் கண்கள் தானமாக வழங்கப்பட்டது.
புனீத் இறந்த பிறகு நாராயண நேத்ராலயா ஆட்கள் விக்ரம் மருத்துவமனைக்கு வந்து அவரின் கண்களை எடுத்துச் சென்றனர். புனீத்தின் கார்னியாவை(Cornea) நான்காக பிரித்து நான்கு பேருக்கு பொருத்தப்பட்டது. புனீத்தின் கண்களால் தற்போது நான்கு பேருக்கு பார்வை கிடைத்திருக்கிறது.
தன் குடும்பத்தார் இறந்த பிறகு அவர்களின் கண்கள் தானம் செய்யப்படும் என்று புனீத்தின் தந்தையான டாக்டர் ராஜ்குமார் 1994ம் ஆண்டு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel