கொரோனா வைரஸ் ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டிருந்த தியேட்டர்கள் தமிழகத்தில் இன்று தான் திறக்கப்பட்டன.
தீபாவளி பண்டிகைக்கு பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாவது வழக்கம். ஆனால் இந்த தீபாவளிக்கு பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை.
இந்நிலையில் ஜீவா, அருள்நிதி நடித்துள்ள களத்தில் சந்திப்போம், சந்தானத்தின் பிஸ்கோத், எம்.ஜி.ஆர். மகன் மற்றும் இரண்டாம் குத்து ஆகிய படங்கள் தீபாவளிக்கு தியேட்டர்களில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரதிராஜா அறிக்கை வெளியிட்ட பிறகே இந்த நான்கு பட ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.