காட்மண்டு

நேபாள நாட்டின் தலைநகர் காட்மண்டுவில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 4 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேபாளத்தின் தலைந்மர் காட்மண்டு.  இந்நகரில் உள்ள சுகேதரா, கட்டிகுலோ மற்றும் நாகதுங்கா ஆகிய இடங்களில் இன்று அடுத்தடுத்டு குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.   இண்ட குண்டு வெடிப்பில் இதுவரை 4 பேர் பலியானதாக தகவல்கள் வந்துள்ளன.

அத்துடன் 7 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.    இதனால் மகள் கடும் பதட்டம் அடைந்துள்ளனர்.  காட்மண்டு நகர் முழுவதும்  காவல்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.   பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ள்னர்.  அத்துடன் இந்த தாக்குதலுக்கு மாவோயிஸ்டுகள் காரணமாக இருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்த போதிலும் இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை.