ஜெய்ப்பூர்,
வடமாநிலங்களில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவு மற்றும் பனி மூட்டம் காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் பணி மூட்டம் காரணமாக சாலை தெரியாததால், கார் குளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
வடமாநிலங்களில் பெய்து வரும் அதிக பனிப்பொழிவு காரணமாக போக்குவரத்து முற்றிலும் முடங்கி உள்ளது. சாலை, ரயில், விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. பல விமான சேவைகள் ரத்து செய்யப்படுகிறது. அதுபோல ரெயில் சேவைகளும் மாற்றப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ராஜஸ்தான் பரத்பூர் மாவட்டம் டிக் பகுதியில் கடும் பனிமூட்டம் காரணமாக கார் ஒன்று குளத்தில் விழுந்தது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து வந்த போலீசார் குளத்தில் விழுந்த காரில் இருந்தவர்களை மீட்டனர். இதில் 4 பேர் இறந்துள்ளதாகவும், மேலும் 4 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.