வாழப்பாடி. அக்.28:
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் வாழப்பாடி கே.ராமமூர்த்தியின் 17 வது நினைவு தினம், அக்டோபர் 27ம்தேதி ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் அஞ்சலி செலுத்தினர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடியில், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மறைந்த முன்னாள் மத்திய அமைச்சருமான வாழப்பாடியார் ராமமூர்த்தியின் 17 வது நினைவு தினம், அக்டோபர் 27ம் தேதி ஞாயிற்றுக் கிழமை அனுசரிக்கப்பட்டது.
வாழப்பாடியிலுள்ள இவரது நினைவிடத்தில் மலர் துாவியும், பேருந்து நிலையத்திற்கு அருகே வைக்கப்பட்டி ருந்த திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்தும், வாழப்பாடி ராமமூர்த்தியின் மகன்களான அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் இராம சுகந்தன், கிராம தொழிலாளர் சம்மேளன நிர்வாகி இராம கர்ணன் ஆகியோர், குடும்பத்தோடு அஞ்சலி செலுத்தினர்.
சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.கே.அர்த்தனாரி, துணைத்தலைவர் முனுசாமி, மாநகர கலைப்பிரிவு நிர்வாகி பாலகிருஷ்ணன், வாழப்பாடி நகர தலைவர் ரவிமணி, வட்டாரத் தலைவர்கள் ராஜாராம், ஆனந்தன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் சேலம் தனசேகர், விவசாய பிரிவு ஜே.பி.கிருஷ்ணா, வீரபாண்டி வட்டாரத் தலைவர் செட்டியார், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் முரளி, அருளானந்தம், சதீஷ், சக்தி, காமராஜ், பாபு, ரவி மற்றும் காங்கிரஸ் தொண்டர்களும் அஞ்சலி செலுத்தினர்.
சென்னையில் வாழப்பாடி ராமமூர்த்தி அறக்கட்டளை அலுவலக வளாகத்திலுள்ள வாழப்பாடி ராமமூர்த்தி சிலைக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி, முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் பீட்டர் அல்போன்ஸ், பொன்குமார், அருள் அன்பரசு மற்றும் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் அஞ்சலி செலுத்தினர்.