சண்டிகர்: முன்னாள் மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.இதனால், அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாய மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராடி வருகின்றனர்.  இதைத்தொடர்ந்து விவசாயிகளுக்கு ஆதரவு கரம் நீட்டிய பாஜக கூட்டணி கட்சியான  சிரோமணி அகாலிதளம் , கூட்டணியில் இருந்த விலகியது. அதைத்தொடர்ந்து, அந்த கட்சியின் ஒரே எம்.பி.யும், தலைவர்  சுக்பீர் சிங் பாதல் மனைவியுமான  ஹர்சிம்ரத் கவுர் பாதல் தனது அமைச்சர் பதவியையும்  ராஜினாமா செய்தார். தொடர்ந்து விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகிறார்.

இந்த நிலையில்,   ஹர்சிம்ரத் கவுருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஹர்சிம்ரத் கவுர், வீட்டில் தன்னை தனிமை படுத்தி கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.