டெல்லி: தன் மீதான பாலியல் வழக்கை ஆந்திராவுக்கு மாற்றக் கோரி இடைநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உச்சநீதி மன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார்.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பாதுகாப்புக்கு பொறுப்பேற்றிருந்த, சிறப்பு டிஜிபி ராஜேஸ்தான், பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறப்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் இடை நீக்கம் செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை 3 மாதத்திற்குள் விசாரித்து முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையில், இந்த நிலையில், தனக்கு எதிரான வழக்கு விசாரணையை ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு மாற்றக் கோரியும் விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் விசாரணைக்கு தடை கோரியும் ராஜேஷ் தாஸ் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஏற்கனவே இதுபோன்ற ஒரு மனு தாக்கல் செய்த நிலையில், உச்சநீதிமன்றம் அவரது கோரிக்யை ஏற்க மறுத்துவிட்டது. ஆனால், தற்போது மீண்டும் புதிய மனு தாக்கல் செய்துள்ளார்.
ராஜேஷ் தாஸ் மீதான வழக்கில் அரசு தரப்பு சாட்சியங்களின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட உள்ள நிலையில், அவர் உச்சநீதிமன்றத்தை நாடியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.