மும்பை:
ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் கே சி சக்ரவர்த்தி மாரடைப்பைத் தொடர்ந்து காலமானார். அவருக்கு வயது 68.
உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று செம்பூரின் ஜென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இவருக்கு மனைவி மற்றும் மகன் உள்ளனர்.
சக்ரவர்த்தி பொருளாதாரம் மற்றும் வங்கித் தொழில் பிரச்சினைகள் பற்றிய ஆழமான அறிவு கொண்டவர். குறிப்பாக நிதி சேர்க்கை தொடர்பான பிரச்சினைகள். இந்திய வங்கிகளில் மோசமான இடர் மேலாண்மை நடைமுறைகளை அவர் கடுமையாக விமர்சித்தார். மேலும் வங்கிகளில் ஏற்படும் அபாயங்களைக் கண்காணிப்பதில் தோல்வியுற்றதற்காக மத்திய வங்கி மற்றும் வங்கி உயர் நிர்வாகங்களுக்கு அடிக்கடி குற்றம் சாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.