டெல்லி: பிரணாப் முகர்ஜி உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை என்று டெல்லி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் வசித்து வரும் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடந்த 9-ந்தேதி தனது வீட்டு குளியலறையில் தவறி விழுந்தார். மறுநாள் டெல்லி ஆர்.ஆர்.ராணுவ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மூளையில் ரத்தம் உறைந்திருந்தது தெரியவந்தது. எனவே மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். ஆனால் ஆபரேஷனுக்குப் பிறகு பிரணாப் உடல்நிலை மோசமடைந்தது.
ஆகையால் வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக பிரணாப்புக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.
பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில், 2 நாட்களுக்கு முன்பு கோமா நிலையை அடைந்தார். எனினும், அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனை தெரிவித்து வந்தது.
இந் நிலையில் பிரணாப் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படவில்லை. தொடர்ந்து வென்டிலேட்டர் சிகிச்சை தொடர்வதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. பல இணை நோய் பாதிப்புகள் இருப்பதாகவும், உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.