நாடு முழுவதும் காலியாக 24 மாநிலங்களை எம்.பி.க்கான தேர்தல் வரும் 19-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலின்போது, கர்நாடக மாநிலத்தில் இருந்து காலியாகும் 4 இடங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 2 இடங்கள் காங்கிரஸ் கூட்டணிக்கும், 2 இடங்கள் பாஜகவுக்கும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மல்லிகார்ஜூன கார்கே வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சித் தலைவரான முன்னாள் பிரதமர் தேவகவுடா மாநிலங்களவை எம்.பியாக களத்தில் இறங்கி உள்ளார்.
ஜேடிஎஸ் கட்சிக்கு 34 எம்எல்ஏக்கள் வாக்கு உள்ள நிலையில், மேலும் தேவைப்படும் 44 எம்எல்ஏக்களின் வாக்குகளுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்கிறது.
இதையடுத்து, இன்று தேவகவுடா முறைப்படி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மனுத்தாக்கலின்போது அவரது மகன்கள் குமாரசாமி, ரேவண்ணா உள்ளிட்டோர் உடன் சென்றனர்.